Tuesday, August 2, 2011

ஆண்டறிக்கை 2007-2008

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வீரராக்கியம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்
-----------------------------------------------------------

பள்ளி ஆண்டு விழா
2007-2008

ஆண்டறிக்கை

வணக்கம், பள்ளியின் ஐம்பத்தோராம் ஆண்டுக்காண ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்பிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

இடையில் சில ஆண்டுகளாக நின்று போயிருந்த ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த ஆண்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப் பெரியவர்களின் கடும் முயற்சியின் பயனாக பொன் விழாவாக சிறந்த முறையில் கொண்டாடப்ட்டது, இம் மன்றில் உள்ள அனைவருக்கும் நினைவிருக்கும்.

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க நமது பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு
ஹஉவiஎவைல க்ஷயளநன டுநயசniபே என்னும் செயல் வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகின்றது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகளை அனைவருக்கும் கல்வித் திட்டம் நிதியின் மூலமாக செய்யப்பட்டது. நிதிப் பற்றாக்குறை ஏற்பட்ட போது தேவையான சிமெண்ட் மற்றும் செங்கற்களை நன்கொடையாக, நமது பாலராஜாபுரம் துணை தலைவர்
திரு ஏமு பழனிச்சாமி அவர்கள் தந்து உதவினார். அன்னார்க்கு இச்சமயம் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

செயல் வழிக் கற்றல் முறையில் மாணவர்களின் வேறுபட்ட கற்றல் வேகத்திற்கு ஏற்ப, தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் கற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சற்று சிரமமனாது என்ற போதிலும் நம் பள்ளியில் சிறந்து முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு படைப்பாற்றல் கல்வி முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இம்முறையில் மாணவ மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்தல் மற்றும் தேர்வு நோக்கில் மட்டும் படித்தல் ஆகிய குறைகள் களையப்பட்டு அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களையும் தன்முனைப்போடும், முழு ஆர்வத்தோடும் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய தேசிய கிராம புற மாணவர் திறனாய்வு தேர்வுகளில் நம் பள்ளியில் இருந்து பதினோரு மாணவர்கள் கலந்து கொண்டனர். இது வரையிலும் கலந்து கொண்ட எண்ணிக்கையை காட்டிலும் இது இருமடங்கு எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டு ஆண்டு விழாவிற்கு நன்கொடை வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். கடந்த ஆண்டு வசூலான தொகையில் செலவினங்களுக்கு ஒதுக்கியது போக மிஞ்சிய தொகையில் பள்ளிக்கு ஒரு கணிப்பொறி ஒன்று வாங்கப்பட்டுள்ளது. ஒரு கணிப்பொறியைக் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியளிப்பது சிரமம் என்பதால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களுக்கு மட்டும் வரும் கல்வியாண்டில் இருந்து கணிப்பொறி பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கூடுதல் கணிப்பொறிகள் நன்கொடையாக பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதிக அளவில் கணிப்பொறிகளை பயன்படுத்தும் நிறுவனங்களின்று பழைய கணினிகளை நன்கொடையாக பெற்று அடுத்த ஆண்டு முதல் படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
இம் முயற்சி வெற்றி பெற பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்வந்து உதவிட வேண்டுகிறேன்.

இப்பள்ளியில் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் அடுத்தபடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்கிறார்களா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அனைவரும் உயர்கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டலுக்கு இணங்க இப்பகுதியில் உள்ள குழந்தைகளின் விவரங்கள முறையாக முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு ஐந்து வயது நிறைவு பெற்ற அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்டதை உறுதி செய்து அனைவருக்கும் கல்வி திட்ட நோக்கங்கள் நிறைவேற இப்பள்ளி துணை நிற்கிறது.

தேசிய ஒருமைப்பாடு, தனி மனித ஒழுக்கம், சமுதாய நல்லுறவு பேணுதல், தன் சுத்தம் போன்ற மனப்பான்மைகள் மாணவர்களிடைய வளர்கக்கப்படவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, காமராஜர் பிறந்த தின - கல்வி வளர்ச்சி நாள் போன்ற விழாக்கள் பள்ளியில் சீரும் சிறப்புமாய் கொண்டாடப்பட்டது.

மாணவர்களை நல்ல குடிமக்களாகி நாட்டுக்கு நல்கும் எம் சீரிய ஆசிரிய பணியில் மேலும் மேலும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுவோம் என உறுதியளித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்

No comments:

Post a Comment