Tuesday, August 2, 2011

ஆண்டறிக்கை 2010-2011

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
வீரராக்கியம், கிருஷ்ணராயரம் ஒன்றியம்
---------------------------------------------------------
ஆண்டு விழா 2011

ஆண்டறிக்கை

வணக்கம், பள்ளியின் ஐம்பத்து நான்காம் ஆண்டுக்காண ஆண்டறிக்கையை உங்கள் முன் சமர்பிப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.

செயல் வழிக் கல்வி மற்றும் படைப்பாற்றல் முறைக்கல்வி

இந்த கல்வி ஆண்டு முதல் தமிழக அரசின் உத்தரவிற்கு இணங்க நமது பள்ளியில் ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு
ஹஉவiஎவைல க்ஷயளநன டுநயசniபே என்னும் செயல் வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகின்றது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகளை அனைவருக்கும் கல்வித் திட்டம் நிதியின் மூலமாக செய்யப்பட்டது.
செயல் வழிக் கற்றல் முறையில் மாணவர்களின் வேறுபட்ட கற்றல் வேகத்திற்கு ஏற்ப, தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்பவும் கற்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சற்று சிரமமனாது என்ற போதிலும் நம் பள்ளியில் சிறந்த முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்க்கு படைப்பாற்றல் கல்வி முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இம்முறையில் மாணவ மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்தல் மற்றும் தேர்வு நோக்கில் மட்டும் படித்தல் ஆகிய குறைகள் களையப்பட்டு அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களையும் தன்முனைப்போடும், முழு ஆர்வத்தோடும் கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சேர்க்கை முறை மாற்றம்
மாணவர்கள் பள்ளியைத் தேடி வரும் நிலையை மாற்றி கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களே வீடு வீடாகச் சென்று ஐந்து வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றனர்.

இம்முறையில் கடந்த கல்வியாண்டில் 26 மாணவர்களும், இந்த ஆண்டில் இதுவரை 10 மாணவர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இம்முறையில் சேர்க்கையில் ஈடுபட்டு வெற்றி கண்டதை தலைமையாசிரியர் கூட்டத்தில் ஒன்றியத்திலேயே முன்மாதிரி பள்ளியாக அமைந்துள்ளதாக, அப்போதைய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டியது இங்கே குறிப்பிடத்தக்கது.

அரசின் வழிகாட்டலுக்கு இணங்க இப்பகுதியில் உள்ள குழந்தைகளின் விவரங்கள முறையாக முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு ஐந்து வயது நிறைவு பெற்ற அனைத்து குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு விட்டதை உறுதி செய்து அனைவருக்கும் கல்வி திட்ட நோக்கங்கள் நிறைவேற இப்பள்ளி துணை நிற்கிறது.

தொடர் கண்காணிப்பு
இப்பள்ளியில் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் அடுத்தபடியாக ஒன்பதாம் வகுப்பில் சேர்கிறார்களா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அனைவரும் உயர்கல்வி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு
பள்ளியில் பயிலும் மாணவர்களின் சுகாதார மேம்பாட்டிற்காக அனைத்து கழிவறைகளும் டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. தேவையான அளவு தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கும் முறையான உடற்பழக்க வழக்கங்கள் பற்றிய கல்வி தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் மூலம் பள்ளிக்கு கூடுதலாக ஒரு வகுப்பறைக் கட்டிடம் ஒன்று பெறப்பட்டு தற்போது கட்டுமாணப் பணி நடைபெற்று வருகின்றது. இவ்வகுப்பறை அடுத்த கல்வியாண்டில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.
கல்விச் சுற்றுலா
மாணவர்களுக்கு பல்துறை அறிவினை வளர்க்கும் வகையில் ஆண்டு தோறும் தவறாது மாணவர்கள் பள்ளிச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த ஆண்டு கன்னியாக்குமரி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களுக்கும், கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாதபுரம் அரண்மனைக்கும் மாணவர்கள் கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்ல தொடர்ந்து கடந்த நான்காண்டுகளாக பேருந்து வசதி செய்து தரும், வீரராக்கியம் வீ.கே. ஏ பால் பண்ணை உரிமையாளர் அவர்களுக்கு அனைவரின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளியின் புதுமைச் செயல்பாடுகள்
அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான சீருடை அணியும் முறை மாற்றப்பட்டு வாரத்தில் மூன்று நாட்கள் பச்சை நிற சீருடை இரண்டு நாட்கள் வெள்ளை நிற சீருடை அணியும் முறை கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கல்வியாண்டு முதல் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக ஆளறி அட்டை (ஐனநவேவைல ஊயசன )வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவீனம் ரூபாய் பத்தாயிரம் பள்ளி நிதியிலிருந்தே அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர் தலைவர், பள்ளி மாணவர் துணைத் தலைவர் மற்றும் வகுப்பு மாணவர் தலைவர்களை ஆசிரியர்கள் நியமனம் செய்யும் முறை இரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தாங்களே தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் கணிப்பொறிமயப்படுத்தப்பட்ட தேர்தல் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் உரிய இடங்களில் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் பள்ளி வேலை நேரங்களில் பள்ளி வளாகத்தைவிட்டு வெளியே செல்வது முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே செய்து தரப்பட்டுள்ளது. மாணவர்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்பட்டு வரும் உணவுப்பண்டங்களை வாங்கி உண்பது முழுமையாக தடை செய்யப்பட்டு, வீட்டிலிருந்தே சிறிய அளவில் ஒரு பெட்டியில் சிறு தீனிகளை கொடுத்தனுப்ப பெற்றோர்களும், மாணவர்களும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்.

மாணவ மாணவியர்க்கான உதவித் தொகைகள்
இந்தக் கல்வியாண்டில் நம் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களில் தாய் தந்தை இரண்டு பேரையும் அல்லது யாரேனும் ஒருவரை இழந்த மாணவ மாணவியர்களுக்கு சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் ஜாமெண்டரி பாக்ஸ். புத்தகப் பை என அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதற்கான கடும் முயற்சி எடுத்துச் செயற்பட்ட நமது பள்ளி ஆசிரியர் திரு சந்திரமாணிக்கம் அவர்களையும் , அவரது முன்னாள் மாணவர்களையும் இந்த நேரத்திலே பாரட்டுவதில் பெருமை கொள்கிறேன்.

வரும் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேரும் அனைத்து மாணவ மாணவியருக்கும் சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் ஜாமெண்டரி பாக்ஸ். புத்தகப் பை என அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசிய ஒருமைப்பாடு, தனி மனித ஒழுக்கம், சமுதாய நல்லுறவு பேணுதல், தன் சுத்தம் போன்ற மனப்பான்மைகள் மாணவர்களிடையே வளர்க்கப்படவேண்டும் என்பதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
குடியரசு தின விழா, சுதந்திர தின விழா, காமராஜர் பிறந்த தின - கல்வி வளர்ச்சி நாள் போன்ற விழாக்கள் பள்ளியில் சீரும் சிறப்புமாய் கொண்டாடப்பட்டது.
மாணவர்களை நல்ல குடிமக்களாகி நாட்டுக்கு நல்கும் எம் சீரிய ஆசிரிய பணியில் மேலும் மேலும் ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயல்படுவோம் என உறுதியளித்து உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்

2 comments:

  1. மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களே...!

    எங்கள் பள்ளி போன்றே தங்கள் பள்ளியும் வலைப்பூ ஒன்றை உருவாக்கி நம் போன்ற அரசுப் பள்ளிகளின் தரத்தையும், வளர்ச்சியையும் உலகலாவிய அளவில் எடுத்துச் செல்ல எடுத்திருக்கும் தங்களின் முயற்சியை எனது பள்ளி சார்பாகவும், ஆசிரியர்கள் சார்பாகவும் பாராட்டுகிறோம்....!!!

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கு நன்றி. ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்னை ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete